Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் நலம் சரியில்லாத மனைவி… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பட்டாசு ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் விஜயா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதிகள் அதே பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழில்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து விஜயாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் குருசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குருசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |