Categories
மாநில செய்திகள்

மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நில நிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித் துறை இணை செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார், வேளாண்மை துறை கூடுதல் இயக்குனராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குனராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மை துறை கூடுதல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |