Categories
உலக செய்திகள்

‘அவசர உதவி அழைப்பு’…. விரைந்து சென்ற போலீசார்…. வாளால் வெட்டிய மர்ம கும்பல்….!!

ஆபத்து என்று அழைப்பு வந்ததை அடுத்து உதவ சென்ற போலீசாரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.

பிரித்தானியா நாட்டில் வடக்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்று உள்ளனர். ஆனால் அங்கு சென்ற அவர்களை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து லண்டன் போலீசார் கூறியதில் “கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.20 மணிக்கு லண்டனில் Wood Green பகுதியில் இருக்கும் Noel Park சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து உயிருக்கு ஆபத்து என்று உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டிலிருந்த 61 வயது முதியவரையும் காப்பாற்ற வந்த இரண்டு காவல் அதிகாரிகளையும் மர்ம கும்பல் ஒன்று கூர்மையான வாளால் வெட்டியுள்ளனர். இதில் அந்த முதியவர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் 2 பேரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் தாக்குதல் நடந்த இடத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது பயங்கரவாதிகளால் நடத்தப்படவில்லை” என்றும் கூறியுள்ளனர்.குறிப்பாக இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக தங்களிடம் வந்து தெரிவிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |