Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 6 விக்கெட் வித்தியாசத்தில் …. திருப்பூரை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்  டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது .

டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று  நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – திண்டுக்கல்  டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக மான் பப்னா 52 ரன்களும் ,சித்தார்த் 36 ரன்களும் எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில்  ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்டும்,  விக்னேஷ், குர்ஜாப்னீத் சிங், எம்.சிலம்பரசன் மற்றும் விவேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு களமிறங்கிய திண்டுக்கல் அணி 146 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.

இதில் தொடக்க வீரரான சுரேஷ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஹரி நிசாந்த், மணிபாரதி இருவரும்  நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் ஹரி நிசாந்த் 53 ரன்னும் , மணிபாரதி 24 ரன்னும் எடுத்தனர். இதன் பிறகு களமிறங்கிய ஹரிஹரன்- விவேக் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது .இதில் அதிரடியாக விளையாடிய விவேக் 57 ரன்கள் குவித்தார் .இறுதியாக திண்டுக்கல் அணி 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது .

Categories

Tech |