வறுமையின் காரணமாக பலரும் பிச்சை எடுத்து அதன் மூலம் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிச்சை எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ராஜஸ்தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் பிச்சைக்காரர் இல்லாத மாநிலமாக உருவாக்குவதே மாநில அரசின் நோக்கமாகும். இதன் முயற்சியாக “கௌரவமான வாழ்வு” என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு வருடம் தொழிற் பயிற்சி கொடுக்கும் முயற்சியோடு மட்டுமல்லாமல் நிரந்தர வேலைவாய்ப்பு கொடுத்து வருகிறது. இதற்கான முயற்சியை ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகம் மற்றும் சோபன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரி இணைந்து செய்து வருகிறது. அதன்படி இதன் முதல் கட்டமாக 60 பிச்சைக்காரர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலையும் ராஜஸ்தான் அரசு கொடுத்துள்ளது.