Categories
மாநில செய்திகள்

BIG NEWS: இன்று தீவிர ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிறுகளில் சில பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர வேறு கடைகளை திறக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை, துடியலூர் சந்திப்பு, காஞ்சிபுரம் 5, 6, 7 வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்பி இட்டேரி சாலை, எல்லை தோட்டம் சந்திப்பு ஆகிய இடங்களில் கடைகள் மூடப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |