இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டு இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84 ரன்களும், ஜடேஜா 56 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய பும்ரா 28 ரன்கள் குவித்தார். இதன் பிறகு 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 25 ரன்களை எடுத்தது. இதையடுத்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஜோ ரூட் 109 ரன்கள் குவித்தார் .சாம் கர்ரன் 32 ரன்களும், பேர்ஸ்டோவ் 30 ரன்களும் எடுத்தனர் .இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும் ,முகமது ஷமி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் ,ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கியது .இதில் 34 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் குவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா ,புஜாரா தலா 12 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டத்தில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கும் .இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .