தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவர் 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் காலகட்டங்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories