தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று அக்கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியளவில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக_வின் பிரதமராக மோடி தேர்வானார். எப்படி தேசியளவில் பாஜக வெற்றி பெற்றதோ அதற்க்கு நேர்மறையாக தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தது. தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது.அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை , தேசிய செயலாளர் H. ராஜா , முன்னாள் பத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன் என போட்டியிட்ட 5 முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதும் மாநில தலைவர் பதவி காலியாக உள்ளது. இதற்க்கு பலரின் பெயர்கள் தற்போது பரிந்துரையில் உள்ளனர். கிட்டத்தட்ட 3 வாரங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி இல்லாமலே செயல்ப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவர் வரிசையில் இருக்கும் அக்கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன் கூறுகையில் , தமிழிசை இருந்த போதும், இல்லாத போதும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.