தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் அமைத்து முதியவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோர் 86,28,324 பேர் உள்ளனர். இதில் 57,81,388 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.