தோனி ஹேர் ஸ்டைலுக்கு விஜயபிரபாகரன் மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இவர் தேமுதிக எனும் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரைப் போலவே இவரது மகன் விஜய பிரபாகரனும் கட்சிக்காக உழைத்து வருகிறார். அதன்படி தனது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் வெளிப்படையாக பேசி வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் மேடையில் கேப்டன் மாசா கெத்தா என பேசிய வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது. இந்நிலையில் விஜய பிரபாகரன் புதிய ஹேர்ஸ்டைல் செய்து புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி இதே போல தனது ஹேர் ஸ்டைலை மாற்றி எடுத்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CSHMdJzlYwY/?utm_medium=copy_link