பிரான்சின் கார் ஓட்டிக்கொண்டு மொபைல் போன் பயன்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் பாரிஸ் Charles-de-Gaulle பகுதி சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனிடையே இரவு 8 மணி அளவில் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு, செல்போனிலும் பேசிக்கொண்டு வந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது சந்தேகப்படும் படியாக பதில் கூறியதை தொடர்ந்து காரை சோதனை செய்தனர்.
இதனிடையே சோதனை மேற்கொண்டதில் நாட்டில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சுமார் 2,630 சிகரெட் பெட்டிகளை கடத்திக் கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கைப்பற்றப்பட்ட சிகரெட்டின் மதிப்பு 13,000(30 லட்சம் ரூபாய்) யூரோவுக்கு மேல் என்றும் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.