அமெரிக்க அதிகாரிகள் ஐ.நா. தூதுவரை கொல்ல முயற்சித்த இருவரை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயக சார்பு தூதுவரான கியாவ் மோதுனை மியான்மர் இளைஞர்கள் இருவர் பதவி விலக கட்டாயப்படுத்துவதற்காக சில திட்டங்கள் தீட்டியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொல்ல முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்த கொலை திட்டம் தொடர்பாக முன்கூட்டியே தெரியவந்ததால் இளைஞர்களின் சதி முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களுக்கு சுமார் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அந்த இரண்டு இளைஞர்களும் மியான்மரில் உள்ள ராணுவ ஆட்சியில் சம்பந்தப்பட்டவர்களா என்பது குறித்த தகவல் எதுவும் உறுதியாக தெரியவில்லை. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவம் சதித்திட்டதுடன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஐ.நா. மன்றத்தில் மியான்மருக்கான தூதுவர் Kyaw Moe Tun ராணுவத்தின் தலையீடு தொடர்பில் எதிர்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.