அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா குறித்த தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் சுமார் 16,62,03,176 பேர் செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவிலும் கொரோனா குறித்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டின் சுகாதார துறை பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் தற்போது 35 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசிகளையும் 16,62,03,176 பேர்கள் செலுத்திகொண்டுள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அறிவித்துள்ளது.