நிலைதடுமாறிய லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் வழியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு ஹைதராபாத்தில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை ராஜவேலு என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கணவாயின் இரட்டைப் பாலம் வழியில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார் மற்றும் லாரி மீது அடுத்தடுத்து மோதியுள்ளது.
இதனையடுத்து விபத்தில் கார்களில் வந்த இம்மாவட்டத்தில் வசிக்கும் கவிதா பிரியதர்ஷினி, முனிரத்தினம், ஜெயலஷ்மி மற்றும் பெங்களூரில் வசிக்கும் பாஷா, இம்ரான், அருண், ஜமீல், மோகன், ஓட்டுனர் ராஜவேல் என 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புங்கவாடி ரோந்து படையினர் மற்றும் காவல் துறையினர் விரைவாக வந்து காயமடைந்த பெண்கள் உள்பட 10 பேரையும் கைப்பற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான கார்கள் மற்றும் லாரிகள் போன்றவற்றை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்று உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.