Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மணல் கடத்திய டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரான புஷ்பா முன்னிலையில் திடீர் ரோந்து பணி நடைபெற்றுள்ளது. அந்த ரோந்துப் பணியில் ராஜபாளையம் தாசில்தாரான ராமச்சந்திரன் மற்றும் சேத்தூர் வருவாய் ஆய்வாளரான அமிர்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரில் அரசின் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |