அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம் மற்றும் புதுவையில்வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே வட தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் , நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே போல அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் , குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்ககிரி தூர்க்கத்தில் 8 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரியில் 7 சென்டிமீட்டர் மழையும் , வேலூர் மாவட்டம் ஆம்பூரிலும் , நாமக்கல் மாவட்டத்திலும் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.