Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை முதல் வணிக வளாகங்கள், மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி.  மேலும் இவை அனைத்தும் வார இறுதி நாட்களில் செயல்பட அனுமதி இல்லை.

மேட்டூர் அணை பூங்கா, கொங்கணாபுரம், வீரகனூர் வாரச்சந்தை ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாப்பேட்டை மெயின் ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலையில் உள்ள கடைகள், லாங்கிலி ரோடு பால் மார்க்கெட், லீ பஜார், வீரபாண்டியார் நகர் கடைகள், வ உ சி மார்க்கெட், சின்னக்கடை வீதியில் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கலாம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |