Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தாய் – மகள் எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் பரபரப்பு…!!

தாய் – மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் பகுதியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மரகதம் என்ற மனைவியும், அனுஷ்கா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சிவராஜ் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகின்றார்.

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 7 – ஆம் தேதி அன்று மனைவி மரகதம் மற்றும் மகள் அனுஷ்கா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் தாயும் மகளும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் மரகதம் மற்றும் அனுஷ்கா இருவரும் கொளத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி மரகதம் மற்றும் அனுஷ்கா இருவரையும் பிணமாக மீட்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |