இங்கிலாந்தில் ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரே நாளில் சுமார் 28,612 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 103 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,89,703 ஆகவுள்ளது. மேலும் கொரோனாவின் பிடியிலிருந்து சுமார் 22,383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.