Categories
தேசிய செய்திகள்

அட பாவி….. இப்படியா யோசிப்ப… ”முடிக்குள் தங்கம்”… அயன் பட கடத்தல் …..!!

தலை முடியை கட் செய்து அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டான்.

வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு குற்ற , திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலை அளிக்கின்றது. குறிப்பாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுவது வேதனையின் உச்சம். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் கொள்ளை சம்பவம் வித்தியாசத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு காண்போரை  விநோதத்தில் உறைய வைக்கின்றது. அப்படி சம்பவம் தான் கேரள கொச்சி விமான நிலையத்தில் நடந்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்த அயன் படத்தில் எப்படி தலையில் மறைத்து வைரம் கடத்தி வருவாரோ அதே போல கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நௌஷத் சார்ஜாவில் இருந்து கொச்சி விமானம் நிலைத்துக்கு தங்கம் கடத்திக் கொண்டு வந்து சிக்கிக்கொண்டார். தன்னுடைய தலையில் முடியை வெட்டி விட்டு அதில் தங்கம் வைத்து , அதற்கு மேலே விக் வைத்து கட்சிதமாக கொண்டு வந்த 1.13 கிலோ தங்கத்தை அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி சோதனையில் சிக்கிக் கொண்டார். தற்போது அவரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |