தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வருடன் கலந்தாலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.