Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி…. வெளியான புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும்ஒருசில இடங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அந்தவகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் தேவையான பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறிகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செல்ல அனுமதிக்கப்படும். மேலும் தேநீர்க் கடைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |