இந்தியாவுக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின் எம்.பி.-யும் ,இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்படும் அதிபர் ஜோ பைடன் என்று அறிவித்துள்ளார். அதன்படி ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா சார்பில் இதுவரை சுமார் 8 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது, இந்திய அரசு சார்பில் அமெரிக்காவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உட்பட பல்வேறு உதவிகளை வழங்கியது. அதே சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார் .இதன் படி இந்தியாவுக்கு சுமார் 75 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “இந்தியாவுக்கு 75 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அமெரிக்கா வழங்கி உள்ளது.
ஆனால் இந்த டோஸ் போதாது என்பதால் கூடுதலாக வழங்க வேண்டும்.அதோடு அமெரிக்க அரசு உலக அளவில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவுவதற்கான மசோதாவிற்கு 116 எம்.பி.-க்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். எனவே இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்றும் இதன் மூலம் உலக அளவில் உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும். அத்துடன் இந்தச் சட்டத்தின் மூலம் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது, மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பது மற்றும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும் ” இவ்வாறு அவர் கூறினார் .