ஆப்கானிஸ்தனில் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் 200க்கும் அதிகமான தலீபான்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிம்ரூஸ் மற்றும் ஜவ்ஜான் பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் Kandahar, Herat, Lashkargah மற்றும் Helmand போன்ற மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றுவதை தடுப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து ஜவ்ஜான் மாகாணத்தில் உள்ள ஷெபர்கன் நகரில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேலான தலீபான்கள் கொல்லப்பட்டனர். இதனை ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Fawad Aman உறுதி செய்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் அதிக அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தலீபான்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.