Categories
உலக செய்திகள்

காணாமல் போன சகோதரி…. சி.சி.டிவியில் சிக்கிய சகோதரர்கள்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

சகோதரர்கள் இருவர் சேர்ந்து சகோதரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெர்லின் நாட்டில் கடந்த ஜூலை மாதம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண் திடீரென காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதில் போலீசாருக்கு அந்த பெண்ணின் சகோதரர்கள் இருவர் மீது சந்தேகம் எழும்பியுள்ளது. இந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பெட்டி ஒன்றுடன் ரயிலில் பெர்லின் என்ற பகுதியிலிருந்து Donauworthக்கு சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகள் இவர்கள்தான் என்று உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் பெர்லின் போலீசார் 22 மற்றும் 25 வயதுடைய சகோதரர்கள் இருவர் மீதும் கொலை வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து மறுநாள் அந்தப் பெண்ணின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தங்களது சகோதரியின் நடவடிக்கைகள் சமூகத்திற்கு மாறாக இருந்ததால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |