Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அகற்றப்பட்ட கருவேல மரம்….. கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை…. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்….!!

இரண்டு அடி உயரம் கொண்ட நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் செம்பையா என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான வயலில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனையடுத்து செம்பையா வயலில் விவசாயம் செய்வதற்காக கருவேலமரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளார். அப்போது ஒரு மரத்தை அகற்றும் போது வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. அதன் பின் மண்ணை தோண்டி பார்த்த பொழுது சிலை இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செம்பையா திருமயம் தாசில்தார் பிரவீனா மேரிக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் பணியாளர்கள் மூலம் சிலையை தோண்டி எடுத்துள்ளார். மேலும் வேறு ஏதாவது சிலை இருக்கிறதா எனவும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து முதற்கட்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட சிலையானது நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அம்மன் சிலை எனவும், 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை எனவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |