இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் காணாமல் போனது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் அவசர கூட்டத்தை நடத்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டிற்குள் நடப்பாண்டில் படகின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 10,500 ஐ கடந்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களை வழக்கமாக 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி அதன் பின்புதான் அவர்கள் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து அவர்கள் அந்த ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்று மாயமானதாக டெய்லி மெயில் பெயரிடப்படாத ஆதாரங்களை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் புலம் பெயர்ந்தவர்களை கண்காணிக்கும் அமைப்புகளுடன் அவசர கூட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதன்பின் இங்கிலாந்து அரசாங்கத்தின் வட்டாரம் கூறியதாவது, இங்கிலாந்து நாட்டில் எத்தனை புலம்பெயர்ந்தோர் நுழைகிறார்கள் என்பதும், அதன் பின் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதும் அரசாங்கத்திற்கு குழப்பத்தையே தருகிறது என்றுள்ளார்கள். மேலும் இங்கிலாந்து அரசாங்க அதிகாரிகள் மிகவும் பதட்டமான நிலையில் உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.