Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06/10/2019) நாள் யாருக்கு ? எப்படி.? முழு ராசி பலன் ….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் தொலைபேசி வழி தகவல்களால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்கு உறுதுணையாக நண்பர்கள் இருப்பார்கள். ஆடை , ஆபரணப் பொருட்கள் வாங்க நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். இடமாற்றம் , ஊர் மாற்றங்கள் இன்னைக்கு ஏற்படுவதற்கான சூழ்நிலை இருக்குங்க. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். மாமன் , மைத்துனர் வழி ஒத்துழைப்பு இன்று திருப்திகரமாக இருக்கும்.

தொழில் போட்டிகள் அனைத்தும் விலகி செல்லும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். இன்று பங்கு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். இன்று உங்களுக்கு சூரியன் வழிபாடு மிகவும் சிறப்பாக கை கொடுக்கும். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்கி இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

ரிஷபம் :

ரிஷபம் ராசி அன்பர்களே….!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.  தக்க சமயத்தில் நண்பர்கள் உங்களுக்கு கை கொடுத்து , உதவிகளை செய்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தீட்டிய திட்டம் அனைத்தும் நிறைவேறும். இன்று உங்களின் நட்பு வட்டம் விரிவடையும் நாளாக இருக்கும். இன்று உங்களின் வருமானம் இருமடங்காக இருக்கும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அயல்நாட்டிலிருந்து அலைபேசி மூலம் நல்ல தகவல் வரக்கூடும். இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் , அதன் மூலம் உங்களுக்கு நன்மையும் ஏற்படும்.

பண வரவு திருப்திகரமாக இருக்கும் . தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு முன்னேற்றம் இருக்குங்க. விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதே போல விளையாடும்போது கொஞ்சம் கவனமுடன் விளையாடுங்கள். சக மாணவருடன் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

மிதுனம் :

மிதுனம் ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் கேட்ட இடத்தின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வருங்கால நலன் கருதி எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு தடையாய்  இருந்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. அலைபேசி வழித் தகவல்  ஆனந்தத்தை கொடுக்கும். இன்று உங்களுக்கு காதல் கைகூடும். இன்று எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு நீங்கும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி கொஞ்சம் உணவு உண்ண வேண்டியிருக்கும் , அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதே போல உஷ்டம் தொடர்பாக வயிறு கோளாறு கொஞ்சம் ஏற்படும் , அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம் முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு பண வரவு இருக்கும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.அதே வேலையில் விளையாடும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக விளையாடுங்கள். இன்று நீங்கள் சிவன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்யலாம். நீங்கள் நினைத்தத அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். இன்று காலையில் எழுந்தவுடன் சிவன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கடகம் :

கடக ராசி அன்பர்களே….!! இன்று தடைகள் அனைத்தும் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டாகும் , காணாமல் போன பொருள் இன்று கைக்கு வந்து சேரும்.  கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சனையில் வழி கிட்டும். வியாபார விருத்தி உண்டாகும். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதி கிடைக்கும்.  அக்கம்பக்கத்தினரிடமிருந்து சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

கவுரவம் பார்க்கும் படியான சூழ்நிலை வரும் , தேவையில்லாத பேச்சுகளை தயவுசெய்து பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு புத்தி சாதுரியம் வெளிப்படும். இன்று பொருளாதார நிலை சீராக இருக்கும் , மனதில் மகிழ்ச்சி இருக்கும். இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியங்களும் சிறப்பாக இருக்கும் , நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் கருநீல நிறம்

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று தடைகள் அனைத்தும் விலகி செல்லும் நாளாக இருக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்ப சுமை கொஞ்சம் இருக்கும் , கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் , இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் கொஞ்சம் அதிகரிக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் , மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய தகவல் வந்து சேரும்.

குடும்பத்தில் இருந்த சிக்கல் அனைத்தும் தீரும் , புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் , சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும.  இயந்திரங்கள் , ஆயுதங்கள் , நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது பார்த்து கையாளுங்கள் , கவனமாக இருங்கள். இன்று நீங்கள் சிவன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். காலையில் எழுந்தவுடன் சிவனை வணங்கி இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பு. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே அமையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் கருநீல நிறம்

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே….!!  இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நாடு மாற்றம் , வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வரவும் , செலவும் சமமாக இருக்கும். பிரியமான சிலரை சென்று சந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் ஏற்படும். இன்று அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும் , அதனால் சின்ன , சின்ன வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் , எனவே அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கல்வியில் நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும் , படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் படித்தால் அது சிறப்பை கொடுக்கும். எதிர்பாராத அனுபவங்களை நீங்கள் பெறக்கூடும். இன்று நீங்கள் விஷ்ணு பகவானை வழிபடுவது உங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்தை கொடுப்பதாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்க கூடியதாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

துலாம் :

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முயற்சித்த காரியங்கள் அனைத்தும் வெற்றி காண்பீர்கள். கடன் பயண வாய்ப்புகள் கைகூடும். அழகுப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொதுநல ஈடுபாட்டுடன் இன்று காண்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இன்று செல்வ நிலையும் உயரும். குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை இருக்கும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாகவே செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாகவே இருப்பீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பை கொடுக்கும் இருந்தாலும் இன்று நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொண்டால்  அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது மிகச் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம் : ஆரஞ்சு மற்றும் காவி நிறம்

விருச்சிகம் :

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நிம்மதி கிடைப்பதற்கு நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. பணவரவு நல்லபடியாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கல்யாண கனவுகள் நினைவாகும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் சீராக ஆதாயத்தில் மட்டும் கட்டுப்பாடு இருக்கட்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனை பார்த்துக்கொள்ளுங்கள். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படும்.

விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் இன்று யாரையும் எந்த விதமான வசைச் சொற்களையும் பேச வேண்டாம். எந்த விதமான விமர்சனங்களையும் கிண்டல்களையும்  கேள்விகளையும் நீங்கள் செய்யாமலிருப்பது நல்லது. கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விளையாட்டில் இன்று ஆர்வம் செல்லும். விளையாடும்போது கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான எண்  : 5 மற்றும் 8

அதிர்ஷ்டமான  நிறம் : காவி மற்றும் நீல நிறம்

தனுசு :

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவிகளை செய்வீர்கள் பெற்றோர் மீதான பாசம் இன்றைக்கு அதிகரிக்கும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். தெய்வ வழிபாடுகளால்  திருப்தி காண வேண்டிய நாளாக இன்று இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. தொழில் கூட்டாளிகளை மாற்றும்  சிந்தனை மேலோங்கும். இன்று குடும்பத்தில் குழப்பங்கள் கொஞ்சம் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதன் மூலம் நல்ல பெயர் எடுக்க முடியும்.

சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்றுவிடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்யமுடியும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்டமான  நிறம் : கரு நீல நிறம்

மகரம் :

மகர ராசி அன்பர்களே..!! இன்று வரவை விட செலவு கூடும் நாளாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சி இன்று அதிகரிக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மட்டும் நல்லது. மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். வேலைப்பளு கூடும். பயணத்தால் விரயங்கள் ஏற்படும். சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாளாகவும்  இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் . பொன், பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். விவாத பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.

குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே இன்று அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமைகள் உண்டாகும். மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய செல்வ நிலை இன்று அதிகரிக்கும். இன்று எல்லாவகையான முன்னேற்றங்களும் பெறக்கூடும். இருந்தாலும் இன்று நீங்கள் விஷ்ணு பகவானை வழிபட்டு இன்று நாளை தொடங்குவது நல்லது.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 4 மற்றும் 8

அதிர்ஷ்டமான  நிறம் : ஆரஞ்சு மற்றும் காவி நிறம்

கும்பம் :

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று வரன்கள் வாயில் தேடி வரும் நாளாக இருக்கும். உங்களுடைய வழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். பிரச்சனைகளுக்கு நல்ல முடிவை கொடுக்கும். யோகமான நாளாக இன்று இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றியை கொடுக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தடங்கலாகும் வந்து சேரும். பொருளாதாரம் மேம்படும்.

தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். இன்று மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன்  மூலம் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். அக்கம் பக்கம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று நீங்கள் விஷ்ணு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானது. விஷ்ணு பகவானை மனதார வழிபட்டு இன்றைய நாளை நீங்கள் தொடங்குவது அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வைக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்டமான நிறம் : ஊதா மற்றும் பச்சை

மீனம் :

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.  நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கக்கூடும். உறவினர்களை இன்று நீங்கள் மன மகிழ்ச்சியில் அடைய வைப்பீர்கள். வீண் விரையம் கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்றைக்கு விரிவடையும். இட மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் நீங்கள் மிகவும் பாடுபட வேண்டியதிருக்கும் பார்த்துக்கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் கொஞ்சம் தாமதமாகத்தான் கிடைக்கும்.

பயணங்களின்போது கவனமாக இருங்கள். நீண்ட தூர பயணமாக இருந்தால் தயவுசெய்து தூங்கி விடாதீர்கள். மாணவர்களுக்கு  இன்று விளையாட்டில் ஆர்வம் செல்லும்.  கொஞ்சம் கடுமையாக  உழைத்து பாடங்களை படியுங்கள். அப்போதுதான் நீங்கள் படிக்க கூடிய பாடங்கள் அனைத்தும் மனதில் பதிய வைக்க முடியும். கவனத்தை சிதறவிடாமல் இருங்கள். அனைத்து காரியங்களையும் நாம் சிறப்பாக செய்யலாம். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக அமையும். தொழிலில்  நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று  நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |