Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிபுரம் ஊருணி மேல்கரையை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.

இதை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோரவள்ளி பகுதியில் வசிக்கும் சந்துரு(23) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் சந்துருவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |