ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முக்கிய மாகாணங்களின் தலைநகரை கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலான இடங்களை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாண தலைநகரங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதில் நிம்ரோஸ் மாகாண தலைநகர் ஸ்ராஞ்-ஐ கடந்த வெள்ளிக்கிழமையும், ஜாவஸ்ஜன் மாகாண தலைநகர் ஷேபர்கான்-ஐ நேற்றும் தலிபான்கள் தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர்.