Categories
உலக செய்திகள்

பிரித்தானிய இளைஞர்களுக்கு குட் நியூஸ்..! தடுப்பூசி விதிமுறைகளில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரித்தானியாவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளைஞர்கள் விடுமுறை நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி ஆறு வாரங்கள் என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 8 வாரங்கள் நிறைவடைந்த பிறகே போட்டுக் கொள்ள முடியும். ஆனால் தற்போது பிரித்தானிய இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான ஆதாரத்தை காட்டும் பட்சத்தில் அவர்கள் முன்கூட்டியே தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இந்த நடவடிக்கையை கடைபிடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவிற்கு திரும்பும் பயணிகள் அம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பட்சத்தில் அவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களாக இருந்தால் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என்றும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டு கொள்ளாத இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை உள்ளது.

Categories

Tech |