Categories
உலக செய்திகள்

WOW…. தமிழகத்தில் மீண்டும்… 80’S, 90’S கிட்ஸ்களுக்கு செம அறிவிப்பு…!!!

80’S, 90’S கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பிஸ்கட் என்றால் முதலில் அவர்களுக்கு நினைவுக்கு வருவது மில்க் பிக்கீஸ் கிளாஸ்டிக் பிஸ்கட் தான். அந்த அளவுக்கு மில்க் பிக்கீஸ் பிஸ்கட் மிகவும் பிரபலமாக இருந்தது. மில்க் பிக்கீஸ் பிஸ்கடை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்ததன் காரணமாக மில்க் பிக்கீஸ் கிளாசிக் மீண்டும் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள். இது தமிழகத்தின் மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு கொண்ட ஒரு பிராண்ட். இந்த காலங்களில், நாம் கடந்த காலத்தை இன்னும் அதிகமாக விரும்புகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம். தமிழகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கோரிக்கை வைத்ததையடுத்து பழைய அசல் வடிவத்துடன் வெளிவருகின்றது.

Categories

Tech |