தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடுக்கு வேலைக்கு செல்பவர்கள், ஏற்காடு சுற்றியுள்ள ஊர்களில் வசிப்பவர்கள் ஏற்காடு செல்ல வேண்டுமென்றால் ஆதார் அட்டையை காண்பித்து விட்டு தான் இன்று முதல் செல்ல வேண்டும் என கூறியுள்ளது. வெளி பகுதிகளில் இருந்து ஏற்காடு வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறியுள்ளது.