Categories
தேசிய செய்திகள்

தாயின் பெயரையும் இனிஷியலாக பயன்படுத்த அனுமதி…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாயின் பெயரையும் இனிஷியல் ஆக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாயின் பெயரைஇனிஷியலாக பயன்படுத்துவது தொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரேகா பாலி விசாரித்தார். மனு தாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவளது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி , குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த உரிமை உள்ளது. தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Categories

Tech |