பார்சிலோனா அணியில் இருந்து லயோனல் மெஸ்சி கண்ணீர் மல்க விடைபெற்றார்.
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளுக்கு பின்பு கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றியது. மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக இதுவரை 672 கோல்கள் அடித்து உள்ளார். பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்துள்ளார். 34 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 34 டிராபிகளையும் வாங்கி கொடுத்துள்ளார். 6 முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.
இவரை சிறிது காலம் அணியில் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் பதவி நீட்டிப்புக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 21 ஆண்டுகளுக்குப்பின் அணியில் இருந்து வெளியேறினார். நிதி, கட்டமைப்பு தடைகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அணியில் இருந்து வெளியேறுவது பற்றி கற்பனை கூட செய்ததில்லை என்று மெஸ்சி மிக உருக்கமாக பேசியுள்ளார்.