Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை… நிலவிய குளிர்ச்சியான சூழல்…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் தாங்க முடியாத வேதனையை அனுபவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென மேக கூட்டங்கள் இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது.

மேலும் விடாமல் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனையடுத்து பல்வேறு இடங்களில் மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விடாமல் பெய்த கன மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |