இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பகுதியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் உழவர் பயிற்சி முறைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்தலையூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனரான வே.ஜீவதயாளன் தலைமை தாங்கியுள்ளார்.
அதன்பின் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது மற்றும் மீன் அமிலம், பண்ணை கழிவு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது குறித்த விளக்கத்தை வேளாண் துறை அலுவலர் பச்சையப்பன் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். மேலும் வேளாண் திட்டங்களை பற்றி வேளாண் அலுவலர்களான சிவபிரகாஷ், சந்திரசேகர் ஆகியோர் பேசியுள்ளார்கள். இந்த பயிற்சி முகாமில் பெருந்தலையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.