Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க…. நவம்பர் முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசு வழங்கும் முக்கியமான ஆவணமாகும். இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், நீக்கம், திருத்தம், இட மாற்றம் ஆகியவற்றுக்காக நவம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பெற முகவரி மற்றும் வயது ஆகியவற்றிற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |