தங்களின் பணத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்துகொள்வதற்கு கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பணத்தை உடனடியாக பெறுவது, கடன் பெறுவது மட்டுமல்லாமல் கேஷ்பேக், தள்ளுபடி, வட்டியில்லா EMI என பல்வேறு சலுகைகளும் பெற முடியும். ஆனால் இதனை அலட்சியமாக பயன்படுத்தினால் கடன் சுமை மற்றும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம். கிரெடிட் கார்டு கடன் சுமையில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள். கிரெடிட் கார்டு பில்லை முழுமையாக திருப்பி செலுத்தாமல் இருப்பது மிகவும் ஆபத்து.
அதன் நிலுவைத் தொகை பல நிறுவனங்கள் 24 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. பல மாதங்களாக நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருப்பது கடன் சுமையை ஏற்படுத்தும். கிரெடிட் கார்டு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்துவதன் மூலமாக கூடுதல் கட்டணங்களை தவிர்க்க முடியும் என்று பலரும் தவறாகக் கருதுகிறார்கள். குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்துவதால் மாதம் சுமார் 1300 ரூபாய் வரை நாம் சேமிக்க முடியும். ஆனால் உங்களில் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும் செலுத்தப்படாத நிலுவைத் தொகை தொடர்ந்து கட்டணம் விதிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும். எடுக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்தும் வரை தொடர்ந்து கட்டணம் விதிக்கப்படும். கொடிக்கால் நிறுவனங்கள் இதற்கு 3.5% வரை கட்டணம் விதிக்கிறது. அதனால் ஏடிஎம்களில் பிலிப்கார்டு வைத்து பணம் எடுப்பதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பணம் எடுத்தாலும் அதனை விரைவில் திருப்பி செலுத்தி விடுவது நல்லது.