Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் டிபி நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.வீட்டில் இருக்கும்போது முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்தனர். இவ்வாறு ஊரடங்கால் நாட்டில் காச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 2019 காசநோயால் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2020ஆம் ஆண்டு டிசம்பர் வரை 18 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் ஊரடங்கின் போது மக்கள் வீட்டில் இருந்து வந்ததும், முக கவசம் அணிந்துமே என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |