Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

கோவிலுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்  வனப்பகுதிக்குள் விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சுற்றி திரிந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7 – ஆம் தேதியன்று 2 – ஆம் பிரகாரத்தில் நல்ல பாம்பை பூசாரி பார்த்துள்ளார். இதனை அடுத்து பூசாரி மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரத்திற்குப் பின்பு நல்ல பாம்பை பிடித்துள்ளனர். அதன் பிறகு அந்த நல்ல பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்து பின் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

Categories

Tech |