தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வாரம் ஒன்பது இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்ட நிலையில் சென்னையில் தி.நகர் உள்ளிட்ட 9 இடங்களிலும் இன்று முதல் அங்காடிகள், வணிக வளாகங்களை திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்து வரும் வாரங்களில் நேர கட்டுப்பாடு விதிக்கவும் முடிவு செய்துள்ளது.