தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம், காடாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் பழனிவேல் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, 18 பவுன் தங்க நகைகள், இரு சக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்து விட்டனர்.