நடிகர் விஜய் சேதுபதி அழகிய கண்ணே படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக அழகிய கண்ணே படத்தை தயாரித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கும் இந்த படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அழகிய கண்ணே படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் மாஸ்டர் பட விஜய் பாணியில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.