Categories
தேசிய செய்திகள்

“குறையும் பாதிப்பு” இன்று வாரச்சந்தைகள் திறப்பு…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று முதல் வார சந்தைகள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுடைய வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சந்தைகள் திறக்கப்படுகிறது.

மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் 50% பேர் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சாலையோரங்களில் வியாபாரம் செயல்பட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |