Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த கார்… திடீரென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு துறையினரின் செயல்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து உள்ளது

சென்னை போரூரில் அமைந்திருக்கும் தனியார் மருத்துமனையில் ஊழியராக நாராயணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பணி சம்பந்தமாக பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்னையிலிருந்து மாமல்லபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் அவருடன் வேறு யாரும் பயணம் செய்யவில்லை.

இதையடுத்து கார் மாமல்லபுரம் அருகாமையில் கூத்தவாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென அவரின் செயல்பாட்டை இழந்து நிலை தடுமாறி வலது பக்கத்தில் அமைந்திருக்கும் ரிச்சர்டு என்பவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. அப்போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது. அதன்பின் அந்த வீட்டிலுள்ளவர்கள் காருக்குள் சிக்கி தவித்த நாராயணனை காப்பாற்றியுள்ளனர். பிறகு அந்த வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்புத் துறைக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தீயணைப்பு துறை அலுவலர் வெங்கட கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைவாக சென்று போராடி தீயை அணைத்தனர். ஆனால் கார் அதற்குள் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இதில் தலையில் சிறிய காயத்துடன் உயிர் தப்பி  நாராயணனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |