Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி யூஸ் பண்ண கூடாது” மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தாயார் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் பவுசியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை பார்க்காமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக வாங்கிக் கொடுத்த செல்போனை பவுசியா அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். இதனால் அவரது தாய் பவுசியாவை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவுசியாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |