பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்துள்ளதாக பிரித்தானியா சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்திய பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பிரித்தானியாவிற்கு வந்த பிறகு வீட்டிலோ அல்லது தங்கும் இடங்களிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் அனுமதித்த இடங்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கூடுதலாக 1750 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டும். இதனையடுத்து பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதற்கிடையில் கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர்.
இதில் பிரித்தானியா அரசு அனுமதி அளித்த தடுப்பூசிகளை தவிர்த்து மற்ற தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் ஆக்ஸ்போர்ட் அல்லது ஆஸ்ட்ராசெனகா நிறுவனங்கள் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கும் தளர்வு அளிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது. அதிலும் பிரித்தானியாவின் சிவப்பு நிற பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.