தனுசு ராசி அன்பர்களே.! எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.
இன்று நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நீங்க நிறைவேற்றிக் விடுவீர்கள். தொழில் நல்லபடியாக நடக்கும். உற்பத்தியும் அதிகரிக்கும். வாழ்க்கை ஓரளவு திருப்திகரமாக செல்லும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவற்கான திட்டங்களை தீட்டி விடுவீர்கள். சந்திராஷ்டமத்தில் இருந்து ஓரளவு குறைவதால் பெரிய பிரச்சனை எல்லாம் இருக்காது. மனக் குழப்பம் சரியாகிவிடும். நம்பிக்கைக்குரிய நபர்களை உங்கள் பக்கத்தில் இருப்பார்கள். அது உங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி கொடுக்கும். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் திறமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழில் முன்னேற்றம் இருக்கும். அவ்வப்போது கவலை ஏற்படும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
சில முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். பெண்கள் மற்றவர்களை மதித்து நடக்க வேண்டும். சில நேரங்களில் கோபம் வெளிப்படும். அதனால் உங்களுக்கு பெரிய இழப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். காதலில் உள்ளவர்களின் நிலைபாடுகள் கொஞ்சம் குழப்பங்கள் தரும். காதலில் மனக் கஷ்டம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்